செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 31 ஜனவரி 2019 (18:38 IST)

மகளின் மறுமணம்: போலீசிடம் உதவிகேட்ட லதா ரஜினிகாந்த்..!

சவுந்தர்யா ரஜிகாந்த் திருமணத்திற்காக லதா ரஜிகாந்த் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்துள்ளார்.


 
தமிழ் சினிமாவின் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த். இவருக்கு சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். மேலும்,சௌதர்யா  2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  
 
அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை மறுமணம் செய்யவுள்ளார். 
 
இவர்களின் திருமணம் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.  திருமணத்திற்கு பிறகு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி  பிப்ரவரி  12-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், மகளின் திருமணவிழாவில்  பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொள்ள இருப்பதால் போயஸ் தோட்டத்தில் இருக்கும் தனது இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி லதா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.