புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 31 ஜனவரி 2019 (18:53 IST)

பைக்-ஐ நிப்பாட்டி பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர்: சிக்கியதும் தர்ம அடி

புதுச்சேரியில் உள்ள உழவர் கரையில் சாலையோரமாக உள்ள ஒரு வீட்டின் குளியல் அறை சாலையை ஒட்டியே இருந்துள்ளது. சம்பவ நாளன்று காலை 5 மணி அளவில் பைக்கில் ஒருவர் கடந்துள்ளார். 
 
அப்போது அந்த வீட்டின் குளியல் அறை அருகே பைக்கை நிறுத்தி அதன் மேல் ஏறி குளியல் அறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து கொண்டு இருந்தார். அதாவது அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்ணை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 
 
அந்த குளியல் அறையில் உள்ள ஜன்னல் கண்ணாடி வழியாக யாரும் பார்க்க கூடாது என்பதற்காக அதில் பேப்பரை ஒட்டி வைத்திருந்தனர். இந்த வாலிபர் அதை கிழித்து விட்டு ரகசியமாக பார்த்துள்ளார்.
 
அப்போது அவ்வழியே வந்த ஒருவர் இதை கண்டு கூச்சலிட உடனே அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு ஓடி விட்டார். பாதியில் பெட்ரோல் இல்லாமல் பைக் நிண்ருவிட அதை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளார். 
 
பின்னர் சில மணி நேரம் கழித்து பெட்ரோல் வாங்கிகொண்டு பைக்கை எடுப்பதற்காக அங்கு வந்தபோது மாட்டிக்கொண்டார். அவனை அடையாளம் கண்ட அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். 
 
மேலும், அந்த இளைஞரை அதோடு விடமால் போலீஸாரிடமும் பிடித்து கொடுத்துள்ளனர்.