திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (16:17 IST)

ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொன்று இலவசம்... ஹோட்டலில் முண்டியடித்த கூட்டம் !

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில்  புதிதக ஒரு ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என்று விளம்பரம் செய்யப்பட்டது.

இதைப்பார்த்து மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஹோட்டலில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முககவசம் அணியாமலும் குவிந்தனர்.

இதனால் மக்களுக்கு கொரொனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே திருநெல்வேலியில் ரூ. 6கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டத்தை ஒட்டி மக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூடினர். அதனால் அக்கடைக்குச் சீல் வைக்கப்பட்டது.

தற்போது ஹோட்டலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.+