திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (10:56 IST)

பிரியாணி? லாலிபாப்? தயிர் சாதம்?- கையில் இருப்பதை கண்டுப்பிடிக்க சொன்ன நடிகை!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார். மேலும், ஆடை படத்தில் அமலா பாலின் நெருங்கிய தோழியாக நடித்து லிப்லாக் சர்ச்சை காட்சியில் சிக்கினார்.

சமீபநாட்களகாக சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு கலர் ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு. என கையில் சாப்பிடும் பொருள் ஒன்றை மறைத்து வைத்திருக்கிறேன் அது என்னவென்று கண்டுபிடியுங்கள் பாப்போம் என கூற இணையவாசிகள் சிக்கன் பிரியாணி? லாலிபாப்? தயிர் சாதம்? அவர்களுக்கு பிடித்த ஐட்டங்களை கமெண்ட் அடித்து வருகின்றனர். அது சரி நீங்க கண்டுபிடிங்க பார்ப்போம்..