திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (10:44 IST)

நிர்மலா தேவி விவகாரம்: என்னை பேசவிட்டால் பலரின் முகத்திரைகளை கிழித்தெறிவேன் - உதவிப் பேராசிரியர் முருகன் ஆவேசம்

என்னை சிறையிலே வைத்து காலி செய்ய நினைத்தால், பலரின் முகத்திரைகளை கிழித்தெறிவேன் என உதவிப் பேராசிரியர் முருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி,  துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று காவல் நீட்டிப்புக்காக  நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
 
பின் வெளியே வந்த உதவிப் பேராசிரியர் முருகன், எங்களை பேச விடுங்கள், எங்கள் தரப்பின் மீதான நியாயத்தை விளக்குவதற்கு வழக்கறிஞர் மூலம் வாதாடுவதற்கு எனக்கொரு வாய்ப்பு தாருங்கள். 127 நாள்களுக்கும் மேலாக என்னைச் சிறையில் அடைத்து வைத்திருந்து என்னை தற்கொலை முயற்சிக்குத் தள்ளாதீர்கள். 
என்னை தொடர்ச்சியாக சிறையில் வைத்து, காலி செய்ய பலர் திட்டமிடுகின்றனர். என்னை பேசவிட்டால் என்னை உள்ளே தள்ளிவிட்டு ஆதாயமடைவர்களின் முகத்திரையை கிழிப்பேன் என ஆவேசமாக முருகன் பேசினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.