1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (09:34 IST)

திமுக தேர்தலில் தலைவர் பதவிக்கு ஸ்டாலின்.. பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி!

திமுகவில் தலைவர் பதவிக்காக ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்காக துரைமுருகனும் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு திமுகவில் மு.க.அழகிரியால் சிக்கல் வரும் என ஏற்கனவே எதிர்பார்த்தபடி முதலில் அடாவடியாக பேசினார் அழகிரி,  செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப்பேரணியை நடத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார். 
 
ஆனால் அவர் பின்னால் பெரிய அளவு ஆதரவாளர்கள் இல்லை என்பதை உணர்ந்த அழகிரி தாய் கழகமான திமுகவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை என திடீரென பேக்கடித்தார்.
 
இந்நிலையில் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும். 28 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
 
தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.