திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (17:23 IST)

திமுக தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் - ஆ.ராசா உறுதி

திமுக தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவு இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு நாடெங்கிலிருந்தும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய அதனை சற்று முன்னர் ஸ்டாலின், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் அளித்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா 28 ஆம் தேர்தி பொதுக்குழுவில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. மறுபுறம் தலைவர் பதவிக்கும் பொருளாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.
ஆகவே திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று  கூறியுள்ளார்.