தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதான நிதிநிலை அறிக்கையில் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் ரூபாய் மதிப்பிற்கு வழக்கமாக இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படும் ₹ முத்திரைக்கு பதிலாக ரூ என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றுகிறது, இது முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.
இந்த சின்னத்தை வடிவமைத்த திரு. உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன்.
திரு.மு.க.ஸ்டாலின் நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள்?” என்று கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Edit by Prasanth.K