இன்று பெளர்ணமி தினம்.. திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்..!
இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்திருப்பதாக தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்ய வருவார்கள் என்பதும் கிரிவலம் தினத்தன்று திருவண்ணாமலையில் கோலாகலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று பௌர்ணமி தினம் முன்னிட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை (மாா்ச் 13) சிறப்பு ரயில் இயக்கப்படும். . இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 9.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இதில் 8 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
Edited by Siva