விஜய் முதல்வராக இன்னும் எவ்ளோ எம்.எல்.ஏக்கள் ஆதரவு வேணும்?!.. வாங்க பார்ப்போம்!...

பாலகிருஷ்ணன்
செவ்வாய், 5 மே 2026 (15:27 IST)
நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறது. 50 வருடங்களுக்கு மேல் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தன. ஆனால், விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்திருக்கிறார்..

விஜய்க்கு பேராதரவை கொடுத்த மக்கள் 108 தொகுதிகளில் தவெக வெட்பாளர்களை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். 35 சதவீத வாக்குகளை தவெக வாங்கியிருக்கிறது. விஜய் முதல்வராக உறுதியாகியிருக்கிறது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற விஜய் அதில் ஒரு இடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பின்னரே அவரால் முதல்வராக பதவி ஏற்க முடியும். எனவே, தவெக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 107ஆக குறையும்.

எனவே, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 233ஆக குறையும். எனவே பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் நம்பர் 117 ஆக இருக்கும். தவெகவில் இருந்து ஒருவர் பேரவை தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்பதால் தவெகவின் பலம் 107-ல் இருந்து 106ஆக குறையும். எனவே, கூடுதலாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு விஜய்க்கு தேவை..

எனவே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், பாமக போன்ற கட்சிகளிலிருந்து 11 எம்எல்ஏக்களை தவெக பெறும். அல்லது அதிமுக கூட 11 எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய்க்கு கொடுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.<>

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments