Daily Horoscope
✕

போதையில் அசிங்கமாக திட்டினார்!. அருள் விக்னேஷ் மீது குவியும் புகார்கள்...

Updated: வியாழன், 26 நவம்பர் 2026 (13:18 IST)
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது விசாரணை தொடங்கியிருக்கிறது. விரைவில் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவிருக்கிறார். அனேகமாக அவரிடமிருந்து கட்சி பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படலாம் அல்லது அவரே கூட எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில்தான் அவரின் மீது மற்றொரு புகார் எழுந்துள்ளது. அருள் விக்னேஷின் வீட்டின் அருகே உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வரும் சுரேஷ் என்கிற வாலிபர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘2 மாதங்களுக்கு முன்பு அருள் கணேஷ் மது போதையில் வந்து எனது வாகனத்தின் மீது மோதிவிட்டார்.. வாகனம் சேதமடைந்தது குறித்து நான் அவரிடம் கேட்டபோது என்னை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் ‘அப்படித்தான் செய்வேன்.. நான் எம்.எல்.ஏ’ என்று மிரட்டினார். அவர் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு எந்தவிதமான புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை என பேசியிருந்தார்.

வாலிபர் சுரேஷ் செய்தியாளர்களிடம் விக்னேஷ் பற்றி பேசியதால் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு காவல்துறையினர் மூலம் அவர் பணிபுரியும் இடத்திலிருந்து அவரை வெளியேற்றினர். இதையடுத்து, தவெகவினரும் மற்ற கட்சியினர் போல்தான் நடந்துகொள்கிறார்கள் என அப்பகுதி மக்கள் பேச தொடங்கிவிட்டனர்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

ஒத்துக்கிட்டா இவ்ளோ.. இல்லனா இவ்ளோ வரி!.. இந்தியாவை மிரட்டும் டிரம்ப்...

மேசேஜ் அனுப்பு நேரம் குறிக்கலாம்!.. வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்...

Delimitation மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு? திமுகவின் நிலை என்ன?

விஜய் இன்னும் தூக்கத்திலிருந்து எந்திருக்கல!... உதயநிதி நக்கல்...

குடியுரிமை விவகாரத்தில் டிரம்புக்கு பின்னடைவு.. அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு...

அடுத்த கட்டுரையில்
Show comments