1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (10:58 IST)

அரசின் உத்தரவை மீறி விநாயகர் சதுர்த்தி - இந்து முன்னணி அலப்பறை

தமிழ்நாடு அரசின் உத்தரவை மதிக்க வேண்டியதில்லை என்று இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்தியா முழுவதும் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளில் பலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
 
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவை மதிக்க வேண்டியதில்லை என்று இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் 1,25,000 இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்படும். மேலும் தமிழ்நாடு அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு என கூறி அனைத்து இந்து கோவில்களிலும் வரும் 2 ஆம் தேதி வழிபாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.