திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (15:32 IST)

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குங்கள்: கர்நாடகாவிற்கு மத்திய நீர்வள ஆணையர் உத்தரவு

தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் வழங்குங்கள் என மத்திய நீர்வளத் துறை ஆணையர் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே. ஹல்தர் என்பவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்திற்கு கர்நாடகா குறைந்த அளவே நீர் திறந்து விடுகிறது என்றும் தமிழகத்திற்கு தேவையான 30.6 டிஎம்சி காவிரி தண்ணீரை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளோம் என்றும் கூறினார்
 
தமிழகம் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் தற்போது உள்ள சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றும் விரைவில் இரு மாநிலங்களுக்கும் ஒத்த கருத்தை மத்திய அரசு எடுக்கும் என்றும் கூறினார் 
 
தமிழகத்திற்கு உடனடியாக 30.6 டிஎம்சி காவிரி தண்ணீரை திறந்து விடுங்கள் என கர்நாடக மாநில அரசுக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டதால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது