சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து! – திருச்சியில் அதிர்ச்சி!
திருச்சியில் ஆய்வுக்காக சென்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒமிக்ரான் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி சென்றுள்ளார்.
அங்கு விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.