1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (09:04 IST)

இன்றும் நாளையும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியபோது, ‘ராமநாதபுரம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது
 
அதேபோல் திருவண்ணாமலை பெரம்பலூர் கள்ளக்குறிச்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 48 மணி நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது