திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (12:32 IST)

தொடர் கனமழை எதிரொலி: கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிப்பு

தொடர் கனமழை எதிரொலி: கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிப்பு
வங்க கடலில் உருவான புரெவி புயல் ஒரே இடத்தில் நகராமல் நின்று கொண்டிருப்பதால் தொடர் மழை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த புயல் ராமநாதபுரம் அருகே 40 கிமீ தொலைவில் உள்ளதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு விரைவில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் ராணிப்பேட்டை விழுப்புரம் கடலூர் நாகை திருவாரூர் தஞ்சை மாவட்டங்களிலும் புதுவை காரைக்கால் கள்ளக்குறிச்சியில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக கடலூர் -சிதம்பரம் சாலையில் காரைக்காடு பகுதிகள் வெள்ள நீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
 
வடலூர் - சேத்தியாத்தோப்பு சாலையில் மருவாய் என்ற இடத்தில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குள்ளஞ்சாவடி -ஆலப்பாக்கம் சாலையில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது