புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (18:56 IST)

பலத்த மழை: கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




சென்னை இன்று மாலை பல இடங்களில் குறிப்பாக  ஆவடி, அம்பத்தூர், வளசரவாக்கம், ராமபுரம், கோயம்பேடு  மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

பலத்த மழையை அடுத்து கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர் ரிப்போர்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.