1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (23:00 IST)

சென்னை உள்பட உலகம் முழுவதும் தெரிந்தது சந்திரகிரகணம்

வான்வெளியில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழலில் சந்திரன் மறையும் நிகழ்வே சந்திரகிரகணமாகும். இந்த சந்திரகிரகணம் இன்று இரவு 10.53க்கு தொடங்கும் என்று ஏற்கனவே வானவியலார்கள் அறிவித்திருந்தனர்.



 
 
அந்த வகையில் சற்று முன்னர் சந்திரகிரகணம் தொடங்கியது. இந்த சந்திரகிரகணம் சென்னையிலும் சரியாக இரவு 10.52 மணிக்கு தெரிந்தது. இந்த இரவு நேரத்திலும் சென்னை பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
இதே போன்று ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் சந்திரகிரகணம் தெளிவாக தெரிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 12.48க்கு முழுமையாக முடிகின்றது. சந்திர கிரகணத்தை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது