புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (20:11 IST)

அமெரிக்க துணை தூதரகத்தின் துணைத் தூதகராக பொறுப்பேற்ற ராபர்ட் பர்ஜெஸ்!!

சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.


 
 
அமெரிக்காவிலுள்ள இலியனோஸ் மாகாணத்தின் வாக்கேகன் நகரை சேர்ந்த ராபர்ட் பர்ஜெஸ், கொலராடோ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றவர். 
 
கலிஃபோர்னியா மாகாணத்தின் ஹேஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரியில் முனைவர் பட்டமும், ஆஸ்டினிலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில், தொழில் மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். 
 
2012-ல் அமெரிக்கத் தேசியப் போர் கல்லூரியிலிருந்து தேசியப் பாதுகாப்பு உத்தியில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.
 
இது குறித்து கூறிய ராபர்ட் பர்ஜெஸ், தென்னிந்தியாவில் அமெரிக்க அரசின் பிரதிநிதியாகப் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் பற்றி அறிந்துகொள்ளவும் இருதரப்பு நல்லுறவை முன்னெடுத்துச் செல்லவும் ஆர்வமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.