1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Lovers Hangs in Single rope and suicide

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி: சென்னையில் பரபரப்பு!

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி: சென்னையில் பரபரப்பு!

தூக்கில்
சென்னை மடிப்பாக்கம் அருகே காதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மடிப்பாக்கம் செந்தூர் காலனியை சேர்ந்தவர் முருகன் இவர் ரயில்வே அதிகாரியாக பணிபுரிகிறார். இவரது மனைவி லட்சுமி தலைமை செயலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர்களது மகள் 17 வயதான சங்கீர்த்தனா கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார்.
 
இந்நிலையில் கல்லூரியில் படித்துவந்த 17 வயதான சங்கீர்த்தனா 24 வயதான ரவி என்னும் ஆட்டோ ஓட்டுநரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர பெற்றோர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனையடுத்து கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சங்கீர்த்தனா தனது காதலன் ரவியுடன் சேர்ந்து வீட்டில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து சடலங்களை மீட்ட போலீசார் அவற்றை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளர். பின்னர் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
84 நாட்களுக்கு, 84 ஜிபி; அதிரடி ஆஃபர்... ஆனால் ஏர்டெல் பிளான் வேறு!!