செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (21:29 IST)

இன்னும் ஒரு மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் கனமழை

சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 
 
வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக பெய்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மாவட்டங்களின் பெயர்கள் பின்வருமாறு
 
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 1 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்