நவ.9 உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!!
வங்க கடலில் வரும் நவ.9 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாம். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் நோக்கி நகரக் கூடும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறது.