வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (07:34 IST)

சென்னையில் இன்றும் கனமழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம்..!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடை மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று நல்ல மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை முதல் சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், போன்ற பகுதிகளிலும், அதேபோல் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆழ்வார் பேட்டை, எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. 
சென்னையில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva