தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழகத்தில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தோன்றியுள்ள வளிமண்டல சுழற்சி, நாளை காற்றழுத்த தாழ்வாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தென் தமிழகத்தில் நவம்பர் 26ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தென் தமிழகத்தில் நவம்பர் 25 மற்றும் 27 ஆகிய நாட்களில் கனமழை எச்சரிக்கை விடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், கடலோர ஆந்திரா, ஏனாம், கேரளா மற்றும் மாதே ஆகிய பகுதிகளிலும் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிக்கோபார் தீவுகளில் நவம்பர் 22 முதல் 24 வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயலசீமாவில் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் இரண்டு நாள் மிக கனமழை பெய்யும் என்பதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva