9 ஆண்டுகால பாஜக அரசு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
9 ஆண்டுகால பாஜக அரசு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள தேவிபட்டனம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து நேற்று மாலையில் முகவர்கள் கூட்டத்திற்கு 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திமுக முகவர்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நல மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டு பேசியதாவது:
9 ஆண்டுகால பாஜக அரசு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பாக வாழ இந்தியாவின் வலுவான ஆட்சி அமைய வேண்டும் என்று பேசிய மோடி என்ன செய்துள்ளார்?
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார் என்று கூறிய பிரதமரின் வாக்குறுதி என்ன ஆயிற்று? பாஜக ஆட்சியில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிரதமர் மோடியின் ஆட்சியில் அடக்குமுறை அதிகரித்துள்ளது என்றால் மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்று அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.