வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2024 (16:34 IST)

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

தஞ்சை ஆசிரியை ரமணியை அவரை காதலர் மதன்குமார் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, கத்தியால் குத்திய மதன்குமார் என்பவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியதாவது: ரமணியை நான் இரண்டு ஆண்டுகளாக காதலித்தேன். காதல் குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்த போது, திருமணம் செய்து வைக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து, எனது பெற்றோர் ஆசிரியர் ரமணியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டபோது, 'ஒரு மீனவருக்கு எங்கள் மகளை திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை' என்று கூறிவிட்டனர்.

இதனை அடுத்து, நான் ரமணியிடம் தொடர்ந்து பேசி, 'உன் பெற்றோரை சம்மதிக்க சொல்' என்று கூறினேன். ஆனால் ரமணியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் பேசுவதை அவர் தவிர்த்தார். என்னுடைய காதலை அவர் புரிந்து கொள்ளவில்லை.

'நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது' என்று நான் அவரது வேலை செய்யும் பள்ளிக்கு சென்று கூறிய போது, 'உன்னை திருமணம் செய்ய முடியாது; நீ இருந்து போய் விடு' என்று என்னை விரட்டினார். அதனால் தான் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தேன்," என்று மதன் கூறியுள்ளார்.

இந்த வாக்குமூலம் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva