வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (18:04 IST)

சுவாமி மலையில் எச்.ராஜா அரசியல் ஆருடம்: பாஜகவின் வெற்றி நிலவரம் எப்படி?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்து இப்போது பிரச்சாரம் குறித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. அவர் பேசியது பின்வருமாறு, 
 
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 360 தொகுதியில் வெற்றி பெறும். அதேபோல் பாஜக கூட்டணி தமிழகத்தில் 35 இடங்களில் வெற்றி பெறும்.
தமிழகத்தில் விரைவில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்வார். வங்கி மூலம் பல கோடி பேருக்கு கடன் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என தெரிவித்தார். 
 
மேலும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளில், சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா போட்டியிட வாய்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.