வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (15:12 IST)

இவன் தொல்லை தாங்க முடியல... எச்.ராஜா வருண ஜெபத்தால் கடுப்பான டிவிட்டர் வாசிகள்!

வருண ஜெபம் செய்ததைத் தொடர்ந்து மழை பெய்துள்ளது என எச்.ராஜா டிவிட்டரில் பதிவிட்டதையடுத்து டிவிட்டர்வாசிகள் அவரை வசைப்பாட துவங்கியுள்ளனர். 
 
தமிழகத்திற்கு மழை இல்லாமல் இருந்த போது குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு, தமிழக அரசின் அலட்சியத்தை கண்டித்து திமுக மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால், அதிமுகவினர் சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. 
 
ஒருவழியாக தமிழகத்தில் மழை பெய்தது, குறிப்பாக சென்னை மழை பெய்தது சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதிமுகவினர் மேற்கொண்ட யாகத்தால்தான் மழை பெய்தது என அதிமுகவினரும் பாஜகவினரும் கூறிக்கொண்டனர். 
 
இந்நிலையில், எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், வருண ஜெபம் செய்ததைத் தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்துள்ள போது திமுகவின் பிரசார யுக்தியை பரப்புவதை கடமையாக கொண்டுள்ள ஊடகங்கள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளார். 
இந்த பதிவை கண்ட பலர், எச்.ராஜாவை கலாய்த்து சில கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு... 
 
இந்த ஆளை நல்ல மெண்டல் ஹாஸ்பிடல் ல சேர்த்து விடுங்கப்பா இவன் தொல்லை தாங்க முடியல....
 
ராசாவின் வானிலை அறிக்கை சூப்பர், வருடம் முழுவதும் ஜெபம் செய்ய சொல்லவும் சொந்த காசில்
 
மும்பையில் ஜெபம் இல்லாமலே கொட்டோ கொட்டுன்னு கொட்டுதாம்
 
சார், அப்படியே ராஜஸ்தான்லும் ஒரு வருண ஜபம் பண்ணி பாருங்களேன்?
 
வருண ஜெபமா.... அப்படின்னா சென்னையில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விட்டதா
 
சகாரா பாலைவனத்தில் ஜபம் மேற்கொண்டாலும் பகவான் மழை பொழிந்து விடுவார். அப்படித்தானே ஐயா? 
 
கோவில்களில் வருண ஜெபம் செய்தது தமிழ்நாட்டிற்கா அல்லது மஹாராஷ்டிராவுக்கா என்று தெரியவில்லை. அங்கே மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு வேளை அவர்களும் கடுமையான வருண ஜெபம் செய்திருப்பார்களோ?