திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (11:01 IST)

மும்பையை மிரட்டும் கனமழை: மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவிப்பு

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை நீடிப்பதால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், சில நாட்களாகவே கனமழை பெய்துவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மும்பையிலுள்ள தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை பெய்துவருவதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.