புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (18:13 IST)

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை –நல்ல செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம் !

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைப் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. கடுமையான வெயிலால் மக்கள் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வரும் வேளையில் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகள் முழுவதுமாக வற்றும் நிலையில் உள்ளன. அதனால் மக்கள் மழையைப் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் ’சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை இருக்கும்’ என அறிவித்துள்ளது.