வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (11:51 IST)

”1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததுனால தான் குடிநீர் பிரச்சனையே”: டிவிட்டரில் பொங்கிய எச்.ராஜா…

குடிநீர் பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல நாட்களாக தண்ணீர் பிரச்சனை, மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. மேலும் தமிழக அரசு குடிநீர் பிரச்சனையைக் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், குடிநீர் பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம் என்றும், 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் பல நீர்நிலைகளை அழித்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எச்.ராஜா, மீத்தேன், நீட், நெடுவாசல் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் திமுக தான் என்றும், மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது தான் இந்த திட்டங்களெல்லாம் நடைமுறைக்கு வந்தன என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று திமுக தலைவர் ஸ்டாலினைக் குறித்து ”புளி பழுப்பது சாம்பாருக்கு தான்” என்று கருத்து தெரிவித்ததால் சமூக வலைத்தளத்தில் எச்.ராஜா பெரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுக தான் காரணம் என டிவிட்டரில் கருத்து தெரிவித்திருப்பது, சமுக வலைத்தளவாசிகளுக்கு கேலி செய்வதற்கான மற்றொரு விஷயமாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.