பாகிஸ்தானில் சிறுபான்மையினர்கள் எங்கே போனார்கள்?? ஸ்டாலினை கேள்வி கேட்கும் ஹெச்.ராஜா
பிரிவினையின்போது பாகிஸ்தானில் 30 சதவீத சிறுபான்மையினரான ஹிந்துக்கள் எங்கே போனார்கள் என்று சோனியா காந்தியும் ஸ்டாலினும் பதிலளிக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், திமுக கூட்டணி பேரணி நடத்தவுள்ளனர். இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திமுகவை விமர்சித்துள்ளார்.
அதில், “பிரிவினையின் போது பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களது நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் இடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் ஹிந்துக்கள், கிருஸ்துவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் சித்ரவதை அனுபவித்தனர்” என கூறியுள்ளார்.
மேலும், ”பிரிவினையின் போது பாகிஸ்தானில் 30 சதவிகிதம் பேர் இருந்தார்கள். இப்போது 1 சதவீதம் தான் உள்ளனர், அவர்கள் எங்கே போனார்கள் என சோனியாவும், ஸ்டாலினும் பதில் சொல்லட்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.