வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (13:47 IST)

சொத்துக்களை உயில் எழுதி வைத்த நித்யானந்தா!? – யார் அந்த நபர்?

நித்தியானந்தாவிடம் உள்ள கோடிக்கணக்கான சொத்துகள் எப்படி வந்தன என்பதே தெரியாத நிலையில் தனது சொத்துக்களை உயில் எழுதி வைத்து விட்டதாக நித்யானந்தா கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது ஆசிரமத்தில் சிறார்களை துன்புறுத்துவதாக நித்யானந்தா மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போலீஸார் நித்யானந்தாவை தேடிக் கொண்டிருக்க, அவரோ ஜாலியாக நாளுக்கு ஒரு வீடியோ மூலம் தனது சிஷ்யர்களுடன் பேசி வருகிறார்.

சமீபத்தில் பேசிய அவர் கைலாசாவை தன்னை விட தன்னை கிண்டல் செய்பவர்கள்தான் அதிகம் பிரபலப்படுத்திவிட்டதாக கூறியுள்ளார். கண்டிப்பாக கைலாசா என்ற தனிநாடு அமையும் என கூறியுள்ள நித்யானந்தாவுக்கு இப்போதே 40 லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதாம்.

ஒரு தீவையே வாங்கும் அளவு வசதி படைத்துள்ள நித்யானந்தாவின் சொத்துக்கள் எப்படி வந்தது என்பது குறித்த முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனது சொத்துக்கள் அனைத்திற்கும் வாரிசு யார் என்பது குறித்து தான் ஏற்கனவே உயில் எழுதி வைத்து விட்டதாக நித்யானந்தா கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யார் பெயரில் அந்த சொத்துக்களை நித்யானந்தா எழுதியிருப்பார் என்ற விவாதங்கள் அவரின் பக்தர்களிடையேயே குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளதாம்.