Daily Horoscope
✕

கடுமையான உடற்பயிற்சி எதிரொலி: ரத்த வாந்தி எடுத்து சென்னை ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு..

Written By Mahendran
Updated: புதன், 29 மார்ச் 2023 (11:45 IST)
கடுமையான உடற்பயிற்சி செய்ததன் காரணமாக சென்னையை சேர்ந்த ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் ஆகாஷ். 25 வயதான இவர், ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ச்சி செய்து வந்ததாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி  அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென ரத்த வாந்தி எடுத்ததை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கட்டுமஸ்தான உடலுக்காக ஆகாஷ் அதிக அளவு ஸ்டிராய்டு மருந்து எடுத்துக் கொண்டதாகவும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

வெறியோடு இருக்கேன்.. அம்பாசமுத்திரத்தில் ஜெயிச்சே ஆகணும்!.. சீமான் பேட்டி...

நவ.1 முதல் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கக்கூடாது - டாஸ்மாக் அதிரடி உத்தரவு

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு: தமிழக அரசின் 'இனிய இல்லம்' புதிய திட்டம்!

அதிபயங்கர சைபர் அட்டாக்.. 7 நாட்களுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.. ஜப்பான்

ஆந்திரா, தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் SIR.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments