செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 25 மார்ச் 2023 (16:23 IST)

கோழிப் பண்ணையில் மின்னல் தாக்கி, 5 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

Dharmapuri
தருமபுரி மாவட்டம் கோட்டம்பட்டியில் உள்ள தனியார் கோழிப் பண்ணையில் மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில், 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழகத்தில் சில  நாட்களாக மழைபெய்து வரும் நிலையில், தர்ம்பரி  மாவட்டத்திலும் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.  இன்று அதிகாலை 3 மணியளவில் பெய்த மழையின்போது, மின்னல் தாக்கியதில், சிட்டிலிங் அடுத்த மலைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தீப்பிடித்தது.

மின்னல் தாக்கி திடீரென்று தீப்பிடித்ததில், இந்த தி கோழிப்பண்ணை முழுவதும் பரவியது. இதில், கோழிப்பண்ணையில் இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும், 250 மூட்டை கோழித்தீவனமும் எரிந்து நாசமடைந்தது.

மேலும்,கோழிப்பண்ணை மற்றும் கோழி குஞ்சுகள் வளர்ப்பதற்காக வைத்திருந்த பெட்டிகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கும் கொழி பண்ணை முழுவதும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

தீயில் எரிந்த கோழிப்பண்ணையை வட்டாட்சியர் பார்வையிட்டு கணக்கீடு செய்துள்ளனர்.