யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் வீட்டிலேயே துப்பாக்கி தயாரிப்பது தெரிய வந்தது
இந்த நிலையில் அந்த இரண்டு இளைஞர்களிடம் போலீசார் அவ்வப்போது விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது லாரியில் வெடிகுண்டு வைப்பதற்காக தயாரிப்பதாகவும் முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மேலும் தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக அதற்காகவே துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தயாரிப்பதாகவும் அவர்கள் விசாரணையில் கூறியுள்ளனர்
இந்த நிலையில் இந்த இரண்டு இளைஞர்களையும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva