செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (14:09 IST)

தமிழகத்திற்கும் வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. திருவள்ளூரில் சிறுவன் பலி..!

தமிழகத்திற்கு வராது என்று கூறப்பட்ட ஜிபிஎஸ் நோய் தற்போது திருவள்ளுவரை தேர்ந்த சிறுவனை தாக்கிய நிலையில், அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம்,  உள்பட சில மாநிலங்களில் ஜிபிஎஸ் நோய்த்தொற்று பரவி வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் ஒரு மாவட்டம் முழுவதுமே இந்த நோய் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
 இந்த நிலையில், இந்த நோய் பாதித்து திருவள்ளுவரை சேர்ந்த சிறுவன், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிர் இழந்து விட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பொதுவாக இந்த நோய் குடிநீர் மூலம் பரவுவதாக கூறப்பட்டாலும், புதிதாக கண்டறிந்த நோயாளிகளுக்கு குடிநீர் மூலமாக பரவியிருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. இருப்பினும், கொதிக்க வைத்த நீர் மற்றும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடும் படி பொது மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
 
Edited by Mahendran