திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (13:38 IST)

திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது: கவர்னர் ஆர்.என்.ரவி

governor ravi
திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
 
அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார்.
 
சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் பாரதத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது
 
திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப் போன்றவர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றவே அவர்கள் இந்தியா வந்தனர். எனக்கு இயேசுவும் பிடிக்கும், பைபிளும் பிடிக்கும் என்று கூறினார்.
 
Edited by Mahendran