வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2024 (14:18 IST)

கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? பாஜக பேனர் குறித்து ஜெயகுமார் காட்டம்.!

பாஜக பேனரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இருப்பதை அடுத்து பாஜகவினர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து புகழ்ச்சியாக பேசினார் என்பதும் இதற்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுவையில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி பாஜகவினர் பேனர் வைத்துள்ள நிலையில் இந்த பேனருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

அதிமுக தலைவர்களான எம்ஜிஆர் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது என்றும் தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என இதன் மூலம் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா என்று அவர் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் பயன்படுத்துவது குறித்து விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva