ஒரு சின்னத்தை கூட அப்ளை பண்ண முடியலைன்னா, அவர் என்ன தலைவர்: சீமான் குறித்து அண்ணாமலை
ஒரு சின்னத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க விண்ணப்பிக்க கூட தெரியாத ஒரு தலைவர் எப்படி ஒரு அரசியல் கட்சியை நடத்துவார் என்றும் சின்னம் பறிபோனதற்கு தேவையில்லாமல் என் மேல் சீமான் பழி சொல்கிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி வேறொரு கட்சிக்கு வழங்கப்பட்டதை அடுத்து பாஜக மீது நேற்று சீமான் பேட்டி அளித்த போது பழி கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை தான் சதி செய்து தனது சின்னம் கிடைக்க விடாமல் செய்ததாக கூறிய நிலையில் இது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி அவ்வப்போது சின்னத்தை புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்றும் இந்த அடிப்படை கூட தெரியாமல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் சீமான் சின்னம் பறிபோனதற்கு என் மேல் பணி கூறுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆறு சதவீத வாக்குகள், 4 எம்எல்ஏக்கள் அல்லது ஒரு எம்பி இருந்தால் மட்டுமே ஒரு கட்சிக்கு நிரந்தரமான சின்னம் கிடைக்கும் என்ற அடிப்படை கூட தெரியாமல் அவர் சின்னத்தை புதுப்பிக்காமல் செய்த தவறுக்கு என் மேல் பழி போடுவதாகவும் சீமான் இது மாதிரி செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேல் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதற்கு சீமான் என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva