திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (07:34 IST)

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீர் டெல்லி பயணம்.. பொன்முடி பதவியேற்பு கால தாமதம் ஆகுமா?

governor ravi
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீண்டும் எம்எல்ஏவாக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவியேற்பு செய்து வைக்கும்படி கவர்னருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் இன்று திடீரென தமிழக ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வழக்கமான பணிகளுக்காக அவர் டெல்லி கிளம்பி சென்றதாகவும் நாளை மறுநாள் தான் டெல்லியில் இருந்து விமான மூலம் அவர் சென்னை திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. பொன்முடிக்கு பதவி ஏற்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்ட நிலையில் ஆளுநர் திடீரென இன்று டெல்லி பயணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பொன்முடி பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்கள் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் திடீரென ஆளுநர் டெல்லி பயணம் செய்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் டெல்லியில் உள்ள சில முக்கிய அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட சிலரை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva