திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (15:18 IST)

மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி..! உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியீடு..!!

ponmudi sc
குற்றவாளி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த நகல் வெளியானதை அடுத்து, மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏ. ஆகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கிடையே பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
 
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன் விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
 
பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டதது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? அல்லது பொன்முடிக்கு எம்.எல்.ஏ பதவி மீண்டும் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

 
பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானதை அடுத்து, மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏ. ஆகிறார். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் நகல் சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கப்பட்ட உடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படும்.