1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (12:17 IST)

நான் அப்படி சொல்லல! ஆளுநர் பன்வாரிலால் அந்தர் பல்டி

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கூறியது தனது சொந்த கருத்து அல்ல என ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்துள்ளார்.

 
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படும் போது பல கோடிகள் பணம் புரள்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.  
 
அதனைத் தொடர்ந்து, சென்னையில் உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் “துணை வேந்தார் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற நினைத்தேன். அதில் பல கோடி பணம் புரண்டது. துணைவேந்தர் நியமனம் தகுதி அடிப்படையில்தான் நடைபெற வேண்டும்” என அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஊழல் நடந்திருப்பது தெரியுமெனில், அதுபற்றி ஆளுநர் ஏன் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.,
 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சில கல்வியாளர்கள் ஆளுநரை சந்திக்கும் போது கூறிய கருத்துகளையே ஆளுநர் பிரதிபலித்தார். ஊழல் அல்லது பணப்பரிமாற்றம் குறித்து யார் மீதும் ஆளுநர் எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. கடந்த காலங்களில் துணை வேந்தர்கள் வீடுகளில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி கைது செய்த சம்பவங்களும் நடந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆளுநர் மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். இதுவரை 9 துணை வேந்தர்கள் தகுதி, திறமை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.