வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (10:30 IST)

ஆபரேஷன் கோபால் - ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன?

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது.

 
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது 124A பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆளுநரை பணி செய்ய விடாமல் அவர் தடுத்ததாகவும் வழக்கப்புதிவு செய்யப்பட்டது.
 
ஆனால் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை. அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடியாது எனக்கூறி நக்கீரன் கோபாலை நீதிபதி கோபிநாத் விடுதலை செய்து உத்தரவிட்டார். நேற்று காலை கைது செய்யப்பட்ட கோபால், சிறைக்கு செல்லாமலேயே மாலை விடுதலை செய்யப்பட்டார்.
 
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை நக்கீரன் பத்திரிக்கை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 4 முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றதாகவும், ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலுக்கு கல்லூரி மாணவிகள் பலரை அறிமுகம் செய்ததாகவும், பன்வாரிலால் மதுரை வரும்போதெல்லாம் அவரை சந்தித்து பேசியதாகவும் செய்தி வெளியிட்டது. 

 
எப்படியாவது துணை வேந்தர் பதவியை பெற உயர் மட்ட அதிகாரிகள் பலருக்கு, அழகான கல்லூரி மாணவிகளை அறிமுகம் செய்து வைத்ததாக நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டதாக நக்கீரன் செய்தி வெளியிட்டது.  அவரின் வாக்குமூலம் ஆளுநர் மாளிகை மற்றும் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்த விவகாரம் நிர்மலா தேதி, முருகன், கருப்பசாமி ஆகியோரை தாண்டி சென்றால் ஆபத்தாக முடியும் எனக்கருதி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

இறுதியாக, ஆளுநருடன் தனக்கு தொடர்புண்டு என தொடர்ந்து நிர்மலா தேவி கூறி வருகிறார். ஆனால், அவரை வெளியே விடாமல் சிறைப்பறைவை ஆக்கி, அவருக்கு ஜாமீனும் கொடுக்காமல், மத்திய மாநில அரசுகள் ஆளுநரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என செய்தியை முடித்துள்ளனர்.
 
எனவே, அவரை கைது செய்ய வேண்டும் என கருதிய ஆளுநர் மாளிகை அதிகாரிகள், நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான செய்திகள் குறித்த கோப்புகளை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் கேட்டுள்ளனர். அவரும் அதை தயார் செய்து கொடுத்துள்ளார். அந்த கோப்பு மத்திய உள்துறையிடம் கொடுக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதாம்.
 
கடந்த 5ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா இருவரும் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசினர். அப்போதுதான், நக்கீரன் கைது பற்றிய புகாரை ஆளுநரின் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் கொடுத்துள்ளார். இதையடுத்தே கோபாலின் கைது சம்பவம் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.