Daily Horoscope
✕

மெல்ல மெல்ல குறையும் தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்!!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:43 IST)
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை தற்போது மெல்ல குறைந்து வருகிறது.
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
 
இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ,4,755-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

இந்தியாவை ஃபாலோ பண்ணா அமெரிக்கா பொருளாதாரம் உயரும் - டிரம்ப் பேச்சு

குழந்தைக்கு செலுத்தும் ரூ.9 கோடி மருந்து வெறும் ரூ.2.5 லட்சம்!.. இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு!....

அடுத்த கட்டுரையில்
Show comments