1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (19:55 IST)

டுவிட்டரில் ’டிரண்ட்’ஆகும் ‘கோபேக் மோடி ’

பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.   அனைத்து கட்டிகளும் மிக முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் கஜா புயலால்  தமிழகம் பலத்த சேதாரங்களைச் சந்தித்தது. இதற்கு தமிழக அரசு தரப்பில் 15000 கோடி இழப்பீடு கோரப்பட்டது. ஆனால் கையில் கிடைத்ததோ வெறும் 1000 கோடி ரூபாய். 
 
இதனையடுத்து தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் வரவில்லை. இதுபற்றி ஒருவார்த்தை கூட மோடி ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று இங்குள்ள ஆளும் அதிமுக, பாஜகவிரனரைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் குற்றம்சாட்டினர்.
 
ஆனால் தற்போது தேர்தல் முன்னிட்டு மட்டும் வாக்கு சேகரிக்க மோடி வந்துள்ளார் என்று எதிர்கட்சிகள் பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று கோவை வந்துள்ள மோடிக்கு சமூக வலைதளமாக டுவிட்டரில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
 
அதில் ’கோ பேக் மோடி’ என்பது டுடிட்டரில் தற்போது டிரண்ட் ஆகி வருகிறது.