வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (18:11 IST)

அரை நூற்றாண்டாக தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தவர் காலமானார்.

கேரளாவில் கடந்த 1965ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் அரை நூற்றண்டுக்கும் மேலாக எம்.எல்.ஏவாக இருந்த கே.எம்.மாணி என்பவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு கேரள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
கடந்த 1964ஆம் ஆண்டு கேரள காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய கே.எம்.மாணி, 1965ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பலா தொகுதியில் இருந்து முதன் முதலாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டமன்றத்துக்கு சென்றார். அதுமுதல் தொடர்ச்சியாக  நடந்த 12 தேர்தல்களிலும் அதே பலா தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
 
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இவரது கட்சி பங்கு பெற்றதை அடுத்து நிதி, வருவாய், சட்டம் உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். இருப்பினும் முதல்வராக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. அதற்கு ஓரிரு முறை வாய்ப்பு வந்தபோதும் அது நடக்காமல், கடைசி வரை கனவாகவே போனது.
 
86 வயதாகும் மாணி கடந்த சில நாட்களாக உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் காலமானார்.