வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (23:53 IST)

பொது மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என அறிவிக்கப்பட்டதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் எதிர்ப்பு

பொது மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசே  நடத்தும் என அறிவிக்கப்பட்டதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்  நாடு முழுவதும் பொது கலந்தாய்வு நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசே பொதுக்கலந்தாய்வு  நடத்தினால், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி பறிபோகும் எனக் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கல்வியாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மருத்துவ கலந்தாய்வு மாநில முறையை விட்டுத்தர மாட்டோம் என்று மத்திய அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் மா .சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:

‘’அகில இந்திய அளவில் பொது மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவகளின் முன்னுரிமை பறிபோகும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில்  இடங்களைப் பிடிக்கும் நிலை ஏற்படும் என பொதுக்கலந்தாய்வை எதிர்ப்போம் மத்திய அரசு இதற்கு தீவிரம் காட்டினால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் ‘’என்று தெரிவித்துள்ளார்.