மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு: மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அனைவருக்கும் சீட்
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சீட் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
யை எம்பிபிஎஸ் படிப்பில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 இடங்கள் உள்ள நிலையில் 47 பேர் மட்டுமே நீட் தேர்வில் தகுதி பெற்று விண்ணப்பித்திருந்தனர் அவர்கள் அனைவருக்கும் தற்போது சீட் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கும் நிலையில் இந்த கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று காலை 9 மணி முதல் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு நேரடியாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது
மற்ற பிரிவினர்களுக்குஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran