திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (22:16 IST)

நடிகர் கிரேஸி மோகனின் மனைவி மறைவு..கமல்ஹாசன் இரங்கல்

crazy mohan and wife
தமிழ் சினிமாவின் பிரபல வசன கர்த்தா கிரேஸி மோகனின் மனைவி நளினி இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் வசன கர்த்தா, மேடை நாடக கலைஞர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகங்கள் கொண்டவர் கிரீஸி மோகன்.  இவர்  கடந்த  2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி மறைந்தார்.

இந்த நிலையில், கிரேஷி மோகனின் மனைவி நளினி இன்று காலமானார். இதற்கு  சினிமாத்துறையினனர் மற்றும் ரசிகர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிரெஸி மோகனின் மனைவி நளினி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்’’ என்று தெரிவவித்துள்ளார்.